பிரமாண்டமாக தயாராகும் ‘கர்ணன்’ படத்தில் விக்ரம்

சமீபத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த கர்ணன் படம் டிஜிட்டரில் வெளியாகி வெற்றி பெற்றது அறிந்த விடயம் .அந்த வேட்டியை கொண்டு
‘மகாவீர் கர்ணன்’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் நியூயார்க்கில் வாழும் இந்தியர் ஒருவர் இந்த படத்தை தயாரிக்கின்றார்

பிரபல மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்த படத்தில் கர்ணன் வேடத்தில் விக்ரம் நடிக்கின்றார். துரியோதனன் வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.