அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அரபு நாடுகளின் எதிர்ப்பு

ஜோர்டான், பாலஸ்தீனம், செளதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ ஆகிய ஆறு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் ஆகியோர் 6ஆம் நாள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் கூட்டம் நடத்தினர்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை அவர்கள் இக்கூட்டத்தில் புறக்கணித்து, எதிர்த்ததோடு, ஜெருசலேம் பிரச்சினையில் உள்ள நிலைப்பாட்டில் அரபு நாடுகள் ஊன்றி நிற்கும் என்று தெரிவித்தனர். இக்கூட்டத்துக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் அஹ்மாத் அப்தோல் கைய்த் இதைத் தெரிவித்தார்.

மேலதிக நாடுகள் பாலஸ்தீன நாட்டை ஏற்றுக்கொள்வதை முன்னேற்ற வேண்டும் என்று அரபு நாடுகள் விரும்புகின்றன என்றும், கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்ட தனி பாலஸ்தீன நாட்டை நிறுவ முடியாமல் இருந்தால், மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவப் போவதில்லை என்றும் இக்கூட்டத்தில் மேற்கூறிய நாடுகள் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளன என்று ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மான் சாஃபாதி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.