தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை உதவிதேர்தல் ஆணையர் சாய்ந்தமருதில்..

(காரைதீவு நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதில்  அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியிவின் பணிப்பின்பேரில் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் திலின விகரமரத்ன மற்றும்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் நேற்று விஜயம் செய்தனர். கல்முனை மாநகரசபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அபேட்சகர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் சந்தேகங்கள் அசாதாரண சூழ்நிலைகள் பாதுகாப்புபோன்றவை தொடர்பில் கேட்டறிந்து அதற்கான தேர்தல் சட்ட திட்டங்கள் விதிமுறைகள் விலகல்கள் இவைகள் மீறப்படுகின்ற பட்சத்தில் ஏற்படப்போகும் விளைவுகள் போன்றவை தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று   சனிக்கிழமை காலை (06/01/2018) சாய்ந்தமருது பிரதேசசெயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் எம். நஸீர்டீன் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் மற்றும் பல அதிகாரிகளும் அம்பாரை மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இவ்வுள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிதேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்ததேசப்பிரிய கண்டிப்புடன் கூடிய பல சட்டங்களை அமுல்படுத்தி யுள்ளதால்அமைதியாகவும் நீதியாகவும் இத்தேர்தல் நடைபெறுவதற்கு சகல வேட்பாளர்களும் ஒத்துழைப்பினை நல்கவேண்டும் என்பதோடு அபேட்சகர்கள் விடயத்தில் முறைகேடுகள் எவையேனும் நிரூபிக்கப்படுகின்ற பட்சத்தில்  குறித்த பிரதேசத்தில்தேர்தல் இடைநிறுத்தப்படலாம். அவை சம்பந்தப்பட்டவர்களும் தண்டனை களுக்கு ஆளாக நேரிடும்  பள்ளிவாசல்களோ அல்லது வேறு மதஸ்தலங்களோ தேர்தல் அலுவலகங்களாகப்
பயன்படுத்தப்படுவது நிர்வாகங்கள் நேரடியாகவோ  மறைமுகமாகவோ தேர்தல் விடயங்களில் செயற்படுவது தெரியவருமிடத்து 04 வருடங்களுக்கு எந்தத்தேர்தலிலும் வாக்களிக்கமுடியாதபடி சம் பந்தப்பட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்படும்.
இவை சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேட்பாளர்கள் தான் வசிக்கின்றஇடங்களைத் தவிரவேறு வளவுகளிலோ கட்டடங்களிலோ தங்களது காரியாலயங்களை அமைத்து செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது. போஸ்ரர்கள் பெடினர்கள் கட்டவுட்டுக்கள் போன்றவற்றை வீதியிலோ வெளியிலோ வைப்பதையும் தொங்கவிடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பணிக்கப்பட்டது.
வாக்காளர் வீடுகளுக்குச் செல்கின்ற போது பத்துப்பேர்களுக்குமேல் செல்வ தற்கு தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது..
 ‘சட்டங்களின் முன் அனைவரும் சமமே ..!சட்டங்கள் சகலருக்கும் பொதுவானவையே..!!’ எனவே சகலரும் சட்டங்களையும் ஒழுங்கினையும் பேணி நடந்து கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.
 

By admin