பஞ்சாங்க கணித்தலின்படி விவசாயம் சாத்தியமாகுமா…?

அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம்.
/
பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற தரைக்கு கீழே பயன்தரக்கூடிய இரு பருவப் பயிரை நடலாம்.
சந்திரன் முதல் கால் பாகத்தில், தரைக்கு மேலே பலன் தரக்கூடிய, இலைச் செடிகளையும், பழத்திற்கு வெளியே விதை தரக்கூடிய செடிகளான, அஸ்பராகஸ் ப்ரோகோலி, முட்டைகோசு, காலிப்பிளவர், மக்காச்சோளம், லிட்டுஸ், வெங்காயம் மற்றும் கீரை வகைகளை நடலாம்.
/
சந்திரன் இரண்டாம் கால் வளாகத்தில் இருக்கும் போது ஒரு பருவத் தாவரமான தரைக்கு மேல் பலன் தரக்கூடிய கொடி வகைகளையும், பழத்தின் உள்விதை இருக்கும் செடிகளான பீன்ஸ், கத்திரி, பட்டாணி, மிளகு, தக்காளி மற்றும் தர்பூசணி போன்ற செடிகளை நடலாம்.
/
சந்திரன் மூன்றாம் கால் பாகத்தில் இருக்கும் போது இரு பருவச் செடிகள், பல்லாண்டு தாவரங்கள், தண்டு மற்றும் வேர் பலன்தரக்கூடிய தாவரங்கள் போன்ற, பீட்ரூட், பூண்டு, கேரட், வெங்காயம் விதை, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பெரிஸ், டர்னிப், கோதுமை மற்றும திராட்சை போன்ற செடிகளைப் பயிரிடலாம்.

சந்திரனின் நான்காம் கால் பாகத்தில், எதுவும் நடவு செய்ய கூடாது, அச்சமயம் களை எடுப்பு, பூச்சிக் கட்டுப்பாடு போன்ற விவசாய வேலைகளைச் செய்யலாம் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது .