பாண்டிருப்பு ஆலய முன்றலில் இன்று இளைஞர் சேனை ஒன்று கூடினர்!

பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய முன்றலில் கல்முனை இளைஞர் சேனையின் கூட்டம் இன்று (07)சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்முனை பிரதேச தமிழ் இளைஞர்கள் 50 இற்கும் மேற்றபட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

கட்சி, அரசியல், அமைப்புக்கள் சார்ந்ததாக அல்லாமல் கல்முனை பிரதேச தமிழ் சமூகம், கல்வி, கலாசார முன்னேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதென முடிவுகள் எடுக்கப்பட்டன.

அத்துடன் எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கல்முனை நகரில் பொங்கல் விழா செய்வதென்றும் கலந்துரையாடப்பட்டு அதற்கென ஒரு குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இந்த அமைப்பு எந்தவித அரசியல், அமைப்புகள், தனிநபர் சார்ந்ததாக இல்லாமல் கல்முனை பிரதேச தமிழ் மக்களின் நலன் சார்ந்த இளைஞர் சக்தியாகவே செயற்படும் என இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

இன்றைய ஒன்று கூடலின்போது சமூக அக்றையுள்ள பெரியவர்களும் கலந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது.

சமூக நலன் சார்ந்து இளைஞர்கள் ஒரணியாக செயற்பட ஒன்று கூடுவது வரவேற்கத்தக்க விடயம் எமது பிரதேச இளைஞர்களுக்கு  உந்துசக்தியாக உறுதுணையாக இருப்பது எல்லோரின் கடமை.

வாழ்த்துக்கள் கல்முனை இளைஞர் சேனை

 

By admin