ஹர்திக் 93 ரன் விளாசினார் இந்தியா 209 ஆல் அவுட்

 தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 286 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது. புஜாரா 5, ரோகித் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் 11, புஜாரா 26 ரன்னில் வெளியேறினர். அஷ்வின் 12 ரன் எடுக்க, சாஹா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இந்தியா 92 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஹர்திக் – புவனேஷ்வர் ஜோடி 99 ரன் சேர்த்து மானம் காத்தது. புவனேஷ்வர் 25 ரன், ஹர்திக் 93 ரன் (95 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), பூம்ரா 2 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 73.4 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  பிலேண்டர், ரபாடா தலா 3, மார்கெல், ஸ்டெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 77 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்துள்ளது.