பாகிஸ்தானில் சீனா தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை அமைக்கிறது

சீனா டிஜிபோயுடி கடற்படை தளத்தை அடுத்து பாகிஸ்தானில் தனது 2-வது வெளிநாட்டு கடற்படை தளத்தை அமைக்கிறது #jibouti / #China
சீனாவும் பாகிஸ்தானும் தீவிர நட்பு  நாடுகளாக உள்ளன. பாகிஸ்தானில் டிஜிபோயுடி என்ற இடத்தில் சீனா  கடற்படை தளம் அமைத்துள்ளது.  இது  கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இந்திய  பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. இங்கு கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக  கூறி தனது வீரர்களையும் ராணுவத்தையும் நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் 2-வது  வெளிநாட்டு கடற்படை தளத்தை சீனா கட்டுகிறது. பலுசிஸ்தானத்தில் உள்ள  ஜிவானி தீபகற்பத்தில் கவுதாரில்  இத்தளம் கட்டப்படுகிறது. இது ஈரானின்  சபாகர் துறை முகத்தின் அருகில் அமைகிறது.சபாகர் துறைமுகம் ஈரான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளால் இணைந்து கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எற்றுமதி வர்த்தகம் செய்ய ஏதுவாக உள்ளது.
தற்போது ஜிவானியில் கட்டப்படும் கடற்படை தளம் சீனா-பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமான படை தளமாக பயன்படுத்தப்பட உள்ளது. ஜிவானி கடற்படை தளம் அமைத்து இத்துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மும்பைக்கு எதிராக  அரபிக் கடலில் கோலோச்ச சீனா முடிவு  செய்துள்ளது. இதன் மூலம் இந்திய பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு செய்தி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்க னவே தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க  ஓய்வுபெற்ற இராணுவ ரிசர்வ் கேர்னல் லாரன்ஸ் செலின்  கூறும் போது சீன மற்றும் பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கிடையே ஒரு கூட்டத்தில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது .