சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

சவுதி மன்னர் அரண்மனையின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட  சவுதி இளவர்சர்கள் 11 கைது செய்யபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சப்க் செய்தி நிறுவனம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தியில், “சவுதியில் மன்னரின் அரண்மனைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 சவுதி இளவரசர்கள் போலீஸாரால் விலகச் சொல்லியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்கள் கைது செய்யப்ட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இளவரசர்களின் போராட்டத்துக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் சவுதி இளவரசர்களுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்பான கட்டணத்தை இனி அரசு செலுத்துவது நிறுத்தப்படும் என்று சவுதி அரசர் கூறியிருந்தார். இதனை திரும்பப் பெறவும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இளவரசர் ஒருவரது இழப்பீடு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் சென்ற ஆண்டுமுதல் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுதாலால் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.