கொள்ளை அடிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த மது பாட்டில் கண்டுபிடிப்பு

டென்மார்க் தலைநகர் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ17கோடி மதிப்புள்ள வோட்கா மது பாட்டிலை போலீசார் கண்டுபிடித்தனர்.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹைகனில் வசித்து வரும் இங்க் பெர்க் என்பவர் மது பார் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அவர் உலகிலேயே அதிக மதிப்புடைய ஒரு வோட்கா பாட்டிலை வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.17 கோடி மதிப்புள்ளதாகும் . வெள்ளை மற்றும் தங்க நிறத்தால் ஆன அந்த வோட்கா பாட்டிலில், விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்டுள்ளது. அதன் மூடியில் ரஷியாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளது.

இந்த மதுபாட்டில் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர் ஒருவர் அந்த வோட்கா பாட்டிலை திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அந்நகரில் கட்டுமான பணியில் உள்ள கட்டித்திலிருந்து அந்த மது பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்கள் அந்த பாட்டிலில் உள்ள வோட்காவை குடித்து விட்டு வெறும் பாட்டிலை மட்டும் விட்டு சென்றுள்ளனர்.