பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறது  காரைதீவு மகா சபை!! 
காரைதீவு மகா சபை – செயலாளர் நடேசமூர்த்தி !
காரைதீவு  நிருபர் சகா

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் இப்பிரதேச சபைக்கு தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற தலைமை வேட்பாளருமான செல்லையா இராசையாவின் சவாலை ஏற்று பகிரங்க விவாதத்துக்கு தயார் என்று காரைதீவு மகா சபை அறிவித்து உள்ளது.

காரைதீவு மகா சபையின் செயலாளர் இளையதம்பி நடேசமூர்த்தி  இராசையாவின் சவாலை மகா சபை ஏற்று கொள்கின்றது என்றும் பகிரங்க விவாதத்துக்கான தினத்தை இராசையா அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

மட்டும் அல்லாமல் காரைதீவில் போட்டியிடுகின்ற பிரதான 04 கட்சிகளின் தலைமை வேட்பாளர்களையும் அழைத்து இணைத்து பகிரங்க விவாதத்தை நடத்துவது சிறந்தது என்று ஒரு முன்மொழிவையும் மேற்கொண்டு உள்ளார்.

 

By admin