(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனை 1ஆம் குறிச்சி கரையோர ஜ.தே.கட்சி தமிழ்ஆதரவாளர்கள் பலர் இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.

கல்முனை மாநகரசபைக்காக த.தே.கூட்டமைப்பு சார்பில் 11ஆம் 12ஆம் வட்டாரங்களுக்கு போட்டியிடும் ஹென்றி மகேந்திரன் சந்திரசேகரம் ராஜன் கு.ஏகாம்பரம் ஆகியோர் நேற்று மாலை குறித்த தமிழ்மக்களை கடற்கரையில் சந்தி;த்து கலந்துரையாடினர்.

கடந்த காலத்தில் தமக்கு தமிழ் பிரதிநிதிகளால் இழைக்கப்பட்ட பாராபட்சம் அநீதி காரணமாகவே தாம் ஜ.தே.கட்சி பக்கம் சார்ந்து ஆதரவளித்ததாக குறித்த தமிழ்மக்கள்  தெரிவித்தனர்.

வேட்பாளர்கள் பதிலளிக்கையில் கடந்தது கடந்ததே என்றும்  மாநகரசபையால் செய்யக்கூடிய திட்டங்கள் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறி தம்மால் இவற்றைச்செய்யமுடியும் என்றும் தமது கட்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்பாகக்கேட்டுக்கொண்டதற்கு அந்த மக்கள் செவிசாய்த்தனர்.

சுனாமியால் முதன்முதலில் மிகமோசமாக பாதிக்கப்பட்ட தமக்கு தரப்பட்ட  வீடு மிக மோசமானநிலையிலுள்ளதாகவும் இதனைத்திருத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வேட்பாளர்கள் உடனே கல்முனை தமிழ்ப்பிரதேச செயலாளர் க.லவநாதனிடம் தொடர்புகொண்டு இதுவிடயம் தொடர்பாக கதைத்தபோது நடவடிக்கை எடுப்பதாகக்குறிப்பிட்டார்.

அதைனையடுத்து இம்முறை அவர்கள் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்போவதாக உறுதியளித்தனர்.

 

By admin