பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய முன்றலில் இளைஞர்கள் ஒன்று கூடல் இன்று – கல்முனை பிரதேச இளைஞர்களுக்கு அழைப்பு!

கல்முனை பிரதேச இளைஞர்கள் பலர் சேர்ந்து உருவாக்கிய ”கல்முனை தமிழ் இளைஞர் சேனை” அமைப்பினர் கல்முனை பிரதேச அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இன்று ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்முனை பிரதேச கல்வி, சமூக முன்னேற்ற செயற்பாடுகளை ஒரு வலுவான இளைஞர் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்க இன்றைய ஒன்று கூடலில் அனைத்து இளைஞர்களையும் பங்கு பற்றி இணையுமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அமைப்பு எந்தவித அரசியல், அமைப்புகள், தனிநபர் சார்ந்ததாக இல்லாமல் கல்முனை பிரதேச தமிழ் மக்களின் நலன் சார்ந்த இளைஞர் சக்தியாகவே செயற்படும் என இவ் இமைப்பினர் தெரிவித்தனர்.

இடம் – பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய முன்றல்
காலம் – 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை – ப.ப 4.30 மணி

 

By admin