நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு… மறைக்கும் ரகசியங்கள்… டொனால்ட் டிரம்பை தோலுரிக்கும் புத்தகம்

நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு….டிரம்ப் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் அவர் மக்களிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என டொனால்ட் டிரம்பை தோலுறிக்கும் புத்தகம் வெளியாக உள்ளது.#TrumpBannonrow
உலகத்தையே தன்னுடைய அதிர்ச்சி டிவிட்டுக்களால் கலங்க வைத்துக் கொண்டு இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஆனால் டிரம்ப்பையே கலங்கடிக்க வைத்து இருக்கிறது அவரைப் பற்றி எழுதப்பட்டு இருக்கும் புத்தகம்.
பயர் அண்ட் புரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்‘ என்ற புத்தகம்தான் டிரம்ப்பின் மனக்கலத்திற்கு காரணம்.
அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையாளர் எழுதிய மைக்கேல் உல்ப் என்பவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிர்மப்  குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.’பயர் அண்ட் புரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்’ என அதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
இதில் டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த புத்தகம்  டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புத்தகத்தை  18 மாதங்களாக 200க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் மைக்கேல். டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். இதற்காக ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் பேட்டி எடுத்துள்ளார். இந்த புத்தகத்தில் டொனால்டு டிரம்பு குறித்து 11 வெடிகுண்டு தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. டிரம்ப் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் அவர் மக்களிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்களும் கூட இதன் மூலம் வெளியே தெரிந்து இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது. டிரம்ப் அலுவலகத்தின் முக்கிய அதிகாரியாக இருந்து நீக்கப்பட்ட ஸ்டிவ் பெனான் இதுகுறித்து குறிப்பிட்டு இருக்கிறார். டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா பெரிய அளவில் உதவியதாக அவர் கூறியுள்ளார். டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் இந்த விஷயத்தில் உதவி உள்ளார்.
அமெரிக்க தேர்தலில் இவர் வெற்றி பெறுவது அவருக்கே கூட சந்தேகமாகத்தான் இருந்துள்ளது. தேர்தல் முடிவிற்கு பின் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். வெள்ளை மாளிகையை பார்த்து டிரம்ப் இப்போதும் பயப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. அங்கு இருக்க அவருக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. எப்போதும் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர்.
டிரம்பிற்கு ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கிறது. அவருடைய பல் துலக்கும் பிரஷை யாராவது எடுத்தால் அவருக்கு பிடிக்காதாம். மேலும் அவருடைய சட்டைகளையும் யாரும் தொடக்கூடாது. யாராவது இதன் மூலம் தன் உடலில் விஷத்தை செலுத்தி தன்னை கொன்று விட முடியும் என்று அவர் சந்தேகப்பட்டு இருக்கிறார். மேலும் இதை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக தனி படையே அமைத்து இருக்கிறார்.
இவாங்கா டிரம்ப் தன் தந்தை டிரம்ப் மீது ஏதோ ஒரு வித வெறுப்பில் இருந்துள்ளதாகவே கூறப்பட்டு இருக்கிறது. டிரம்ப்பின் ஆரஞ்ச் நிற முடிக்கு பின் இருக்கும் கதையை அவர் கூறியுள்ளார். இதற்காக அவர் தனி பணியாளரை வைத்து தன்னுடைய தலையில் ஸ்பிரே அடித்துக் கொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய சிறிய அறையை தியேட்டராக மாற்றி நாசம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
உலகில் இருக்கும் நிறைய நாடுகள் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று கனவு கண்டது. ஆனால் டிரம்ப்பின் குடும்பத்தில் இருந்த பலருக்கும் இந்த கனவு இருந்து இருக்கிறது. டிரம்ப் தோற்றால் அவர் அரசியல் வாழ்க்கையில் இருந்து சென்று விடுவார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதன் மூலம் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெரிய ஆளாக மாறமுடியும். மேலும் இவாங்கா கணவர் ஜெராட் குஷ்னரும் இதன் மூலம் பெரிய ஆளாக மாற முடியும் என்று கூறப்பட்டு உள்ளது.
இவாங்கா டிரம்ப் எப்படியாவது டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து இறக்கிவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக மாறுவதற்கு எல்லா திட்டமும் ரெடியாகிவிட்டதாக இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க டிரம்பை விட இவாங்கா டிரம்பிற்குத்தான் அதிக மதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.