சீனாவில் ஹர்பின் நகரில் பனி கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது

குளிர்காலத்தில், சீனாவில் பல்வேறு பிரதேசங்களில் பனி தொடர்பான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் நடப்பது வழக்கம். குறிப்பாக, வட சீனாவில் ஈர்ப்பு மிக்க நிகழ்ச்சிகள் அதிகம் உள்ளன. அண்மையில், வட சீனாவில் ஹர்பின் நகரில் பனி எனும் தலைப்பில் நடைபெற்ற கண்காட்சியகத்தில் பனி கலை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. சுமார் 1370 விளக்குகளைப் பயன்படுத்தி, நவீனமான தொழில் நுட்பத்தின் மூலம், 3 டி எனும் தொழில் நுட்ப உதவியுடன் சார்ந்து, அற்புதமான பனி கலை நிகழ்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.