வட கொரிய-தென் கொரிய உறவில் காணப்பட்ட நல்ல துவக்கம்

வட கொரியாவும் தென் கொரியாவும் புதிய ஆண்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகக் கொண்டு, இரு தரப்புறவை மேம்படுத்தும் வலுவான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளன. தேக்க நிலையில் சிக்கியுள்ள வட-தென் உறவை மேம்படுத்தி, நெருக்கடியான ராணுவ நேரெதிர் நிலைமையை நிறுத்தி, வளர்ச்சிக்கான அமைதியான சூழ்நிலையை உருவாக்குவது வட கொரியா மற்றும் தென் கொரியாவின் பொது விருப்பமாகும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகிற்கு கொரிய இனத்தை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்பாகும் என்று வட கொரிய தலைவர் கிம் ஜுங்யுன் புத்தாண்டை வரவேற்கும் உரையில் தெரிவித்துள்ளார். மேலும், பிரதிநிதிக் குழுவை அனுப்புவது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் வட கொரியா மேற்கொள்ளும் என்றும், தென் கொரியாவுடன் சேர்ந்து இது பற்றி அடனடியாக விவாதம் நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலாக, பியொங் சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வதற்காக தொடர்புடைய வாரியங்கள் விரைவாக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று தென் கொரிய அரசுத் தலைவர் முன்ச்சேயிங், 2ஆம் நாள் புத்தாண்டில் நடைபெற்ற முதலாவது அரசவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 9ஆம் நாள் பான்முன்ஜோங்கில் இரு தரப்பு உயர் நிலை பேச்சுவார்த்தையை நடத்துவதென்ற முன்மொழிவை தென் கொரிய ஒன்றிணைப்பு அமைச்சகத்தின் தலைவர் சோ மியுங்-கியொன் வட தரப்புக்கு முன்வைத்தார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இரு தரப்புத் துணை அமைச்சர் நிலை பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெறும் முதலாவது உயர் நிலை பேச்சுவார்த்தையாக இது இருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இனத்தின் பொது நலனுக்காக, இரு தரப்புத் தொடர்பை மீண்டும் தொடங்கி, கொரிய தீபகற்ப நிலைமையைத் தணிவுப்படுத்தும் விருப்பத்தை கிம்ஜுங்யுன் தனது உரையில் வெளிப்படுத்தினார். தென் கொரிய தரப்பும் இதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

எதிர்பாராத நிலைமை ஏற்படாததால், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் வட கொரியா கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். வட-தென் கொரிய உறவு இதனால் மேம்பாடும். தவிரவும், கொரிய தீபகற்ப அலுவல்களில் தென் கொரியா மேலதிக இணக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த 10க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. இரு தரப்புகளும் 2000ஆம் ஆண்டிலும் 2007ஆம் ஆண்டிலும் தலைவர்களின் சந்திப்பை நடத்தி, தேசிய இன ஒற்றுமை, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு ஆகியவை பற்றி 2 கூட்டறிக்கைகளை உருவாக்கினர். ஆனால், 2013ஆம் ஆண்டு பாக் கிம்குய் அரசு பதவி ஏற்ற முதல் இரு தரப்புறவு மோசமாக மாறியுள்ளது.

முன்ச்சேயிங் தென் கொரிய அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், வட கொரியாவின் மீது நிர்பந்தத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் கொள்கையை மேற்கொண்டு வருகின்றார். கொரிய தீபகற்பத்தின் தேக்க நிலைமையை முறியடிக்கும் போக்கில் முன்முயற்சியுடன் செயல்படும் உரிமையைப் பெறுவது  தற்போது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வட கொரியாவின் இலக்காகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.