பெண் வேட்பாளர்களை முதன்மைப்படுத்தும் கட்சிகள் சபை அதிகாரத்தை இலகுவாகக் கைப்பற்றலாம்!
கல்முனை மாநகரசபையில் 40 பெண்கள் உறுப்பினர்களாக வரலாம் ஆனால் 40ஆண்கள் வரமுடியாது! இதுதான் தேர்தல் சட்டம்!
இன்று கல்முனையில் கபே(CaFFE) அமைப்பின் பணிப்பாளர் கீர்த்திதென்னக்கோன்!
                                                                                   (காரைதீவு நிருபர் சகா)

பெண்வேட்பாளர்களை முதன்மைப்படுத்தி தேர்தலில் நிற்கும் கட்சி அல்லது சுயேச்சைக்குழு  குறித்த உள்ளுராட்சிசபை அதிகாரத்தை இலகுவாக கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்(கபே- CAFFE) பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்  தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேசசபையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் அறிவுறுத்தல் கூட்டம் இன்று (04) வியாழக்கிழமை சாய்ந்தமருது பர்டஸ் மண்டபத்தில் இணைப்பாளர் அசீஸ் தலைமையில் நடைபெற்றது.

உள்ளுராட்சிசபைத் தேர்தல் வாக்கெடுப்பு சட்டத்திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் கபே அமைப்பின் கூட்டத்தில்  விளக்கவுரை நிகழ்த்தி கலந்துரையாடுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாப் மக்கீன் கபே பற்றிய முன்னுரையை நிகழ்த்தினார்.

 

அங்கு கீர்த்தி தென்னக்கோன் மேலும்கூறுகையில்:

பெண்கள் 25வீதம் ஒவ்வொரு சபையிலும் இருக்கவேண்டும் என்பது இப்புதியமுறைத்தேர்தலில் பிரதான அம்சமாகும். அதன்படி உதாரணத்திற்காக கல்முனை மாநகரசபையில் 40 உறுப்பினர்கள் தெரிவாவார்கள். இவர்களில் 30 ஆண் உறுப்பினர்களும் கட்டாயம் 10 பெண் உறுப்பினர்களும் இருக்கவேண்டும்.

இந்த பெண் உறுப்பினர்களை அந்தந்த கட்சிகள் வழங்கவேண்டும். பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கட்டாயம் சபையில் 25வீதம் இருந்தே ஆகவேண்டும்.

கல்முனை மாநகரசபையில் தேவையானால் 40 உறுப்பினர்களும் பெண்களாக இருக்கலாம். ஆனால் 40உறுப்பினர்களும் ஆண்களாக இருக்கமுடியாது. ஆண்கள் ஆக 30பேர்தான் இருக்கலாம். அது தான் கலப்புமுறைத்தேர்தல் சட்டம்.

 

இதுவரை..

இதுவரை இடம்பெற்ற தேர்தல் முறைகளில் முற்றிலும் மாறூட்ட தேர்தல் இதுவாகும்.

இதுவரை பல லட்சருபா செலவில் போஸ்ட்டர்கள் கட்அவுட்டுகள் காட்சியளித்திருக்கும். தேர்தலுக்கு பல லட்சருபா செலவாகியிருக்கும்.

இலங்கையில் அதிகூடிய பணம் செலவழிக்க்கப்படுகின்ற மாநகரசபைத்தேர்தல் என்றால் அது கல்முனையாகத்தானிருக்கும். அந்தளவிற்கு கோடிக்கணக்கில் செலவுசெய்யபப்டும். கொழும்பு மாநகரசபையை விட கூடுதலாக இங்கு செலவு செய்யப்படும்.

ஏகப்பட்ட வன்முறைகள் பதிவாகியிருக்கும் . முன்ரெல்லாம் வன்முறை என்றால் அக்கரைப்பற்றைக்குறிப்பிடுவார்கள். அந்தளவிற்கு அங்கு தேர்தல் வன்முறைகள் கூடுதலாகவிருக்கும்.

வேட்பாளர்கள் 100 அல்லது 50 வாகனங்களில் வருவார்கள். பாரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்யவேண்டும்.

 

ஆனால் இப்போது..

 ஆனால் புதிய முறைத்தேர்தலில் மேற்கூறிய செலவுகள் சம்பவங்கள் மிகக்குறைவாகத்தானிருக்கும். இதுவரை ஆக 9 வேட்பாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் சகல கட்சிகளையும் சேர்ந்தவர்களே அவர்கள். எந்தப்பாரபட்சமுமில்லை.

இதுவரை குறிப்பிடத்தக்க பாரிய அசம்பாவிதங்கள் எற்கும் பதிவாகவில்லை.

குறுகிய பரப்பினுள் ஒரு வேட்பாளர் வாக்குக்கேட்கும்போது அனைத்தும் இலகுவாகவிருக்கும். பிரச்சினைகளும் குறைவு.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆண்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் கட்சிகள் போதிய பிரதிநதித்துவத்தை அல்லது ஆட்சி அதிகாரத்தை இழக்கும் வாய்ப்பு அதிகம். எனவே இதனையுணர்ந்து கட்சிகளளும் வேட்பாளர்களும் இயங்கவேண்டும். என்றார்.

சாய்ந்தமருது விவகாரமும் அங்கு கலந்துரையாடப்பட்டது.அதனை வேட்பாளர்களான றபீக் அசீம் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

மேலும் வேட்பாளர்களின் ஜயங்களுக்கு  விக்கமளித்தார்.

 

 

By admin