1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப் பெற்றிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2007ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 
இதனைத் தடுத்து நிறுத்தும் அல்லது மாற்று வழியைத் தேடும் ஆத்மார்த்தமான அக்கறையோ அல்லது அரசியல் வல்லமையோ தற்போதைய தமிழர்தம் அரசியல் தலைமையிடம் இல்லை என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.

இந்த நிலையில் “அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்” என்பதற்கிணங்க கிழக்கு மாகாணத் தமிழர்கள் தங்களைத் தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணுவதற்குரிய “அரசியல் பொறிமுறைக்கான அடித்தளத்தை எதிர்வரும் உள்@ராட்சி சபைத் தேர்தல் காலத்திலேயே இட வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.

ஏனெனில், உள்@ராட்சி சபை தேர்தலைத் தொடர்ந்து அடுத்த வருடம் நடுப்பகுதியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளில் நேரடித் தெரிவும், மாவட்ட மட்டத்திலான விகிதாசாரமும் 50:50 கலந்த கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் இதுபற்றிக் கலந்துரையாடி எதிர்காலத்தி;ல் எடுக்கப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானித்து அதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல் கூட்டமொன்று 06.01.2018 ம் திகதி சனிக்கிழமை மு.ப. 09.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி உப்போடையிலுள்ள துளசி மண்டபத்தில் (சிவாநந்தா தேசிய பாடசாலைக்கு முன்னால், பேச்சியம்மன் ஆலயத்திற்கு அண்மையில்) நடைபெறும்.

இக்கூட்டத்தில் தயவு செய்து தவறாது கலந்து கொண்டு தங்கள் மேலான பங்களிப்பினை வழங்கி உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

1. த. சிவநாதன் (சிரேஷ்ட சட்டத்தரணி) – தொலைபேசி இல:- 0776151428

2. செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் – தொலைபேசி இல:- 0771900614

 

By admin