கல்முனை தமிழ் இளைஞர் சேனையால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்முனை பிரதேச சமூக மற்றும் கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை நோக்காகப்கொண்டு இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாகியுள்ள ”கல்முனை தமிழ் இளைஞர் சேனை” அமைப்பால் நேற்று பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியநீலாவணை குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் வறுமையான மாணவர்கள் 12 பேருக்கு முதற்கட்டமாக சிறியளவில் பாடசாலை புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிரதேசத்தில் பரவலாக கல்வி முன்னேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக இவ் அமைப்பினர் தெரிவித்தனர்.

கல்முனை தமிழ் இளைஞர் சேனை தங்கள் நோக்கத்தின்படி அக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வளர்ச்சியடைய கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

By admin