அமெரிக்காவின் சாடலுக்கு சீனாவின் பதிலடி:பயங்கரவாத எதிர்ப்பில் பாகிஸ்தானின் பங்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்:சீனா

பாகிஸ்தான் பெரிய முயற்சிகளோடு தனது பங்கினை செலுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் பாராட்டத்தக்க அளவில் செயலாற்றியுள்ளது. சர்வதேச சமூகம் இதனைப் போதிய அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கங் சுவாங் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு கடந்த 15 ஆண்டுகளாக 3300 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர் உதவியை வழங்கும் செயல் முட்டாள் தனமானது என்றும், இத்தகைய உதவியை நிறுத்துவதெனவும் அமெரிக்கா அண்மையில் அறிவித்துள்ளது.