சென்சென் ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா காலிறுதிக்கு தகுதி

சீனாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சென்சென் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டி ஒன்றில் ரஷ்யாவின் மரியா சரபோவா இரண்டரை மணி போராட்டத்திற்கு பின்னர் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்

அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியுடன் மோதிய மரியா ஷரபோவா, முதல் செட்டை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டில் வெற்றி பெற்றார். அவர் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல் கஜகஸ்தானின் சரினா தியாசு, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா ஆகியோர்களும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.