எமது வாக்குகளை சிதறாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ் ஆசனங்களை காப்பாற்றுவோம். – வேட்பாளர் பொன். செல்வநாயகம்

கல்முனை மாநகர சபைக்காக நடைபெற இருக்கின்ற தேர்தலில் சகல தமிழ் மக்களும் தங்களின் பெறுமதியான வாக்கினை ஒருமித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டிற்கு வாக்களித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்து தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தமிழ் மக்களின் அரசியல் சக்தியை ஒற்றுமையாக வெளிப்படுத்துவோம்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பாண்டிருப்பு 10 ஆம் தேர்தல் வட்டாரத்தில் போட்டியிடும் பொன். செல்வநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

பாண்டிருப்பில் தேர்தல் தொடர்பான பரப்புரை மக்கள் சந்திப்பினை மேற்கொண்ட போது அவர் மேலும் தெரிவிக்ரைகயில்…

எமது வாக்குகள் இங்கு சிதறடிக்கபபடுமானால் அது எமக்கு மிகவும் பாதகமாகவே அமையும் இந்த கலப்பு முறைத் தேர்தலில் விகிதாசாரம் மூலமும் கிடைக்க வேண்டிய எமது தமிழ் ஆசனங்களை கல்முனை மாநகரசபைக்கு எடுத்துச்செல்ல வேண்டியது அவசியமமாகும் எனவே வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு இடமளியாமல் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.

பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம் எனவே எமக்கான தீர்வுகளை காண்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சம்பந்தன் ஐயாவின் கரங்களை பலப்படுத்துவோம் என்றார்.

By admin