கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள கல்முனைப்பிராந்திய  உதவிப்பணிப்பாளராய்க்கடமை புரிந்த றோட்டரியன் டொமின்கோ ஜோர்ஜ் அவர்கள்  மரணமான செய்தியை அறிந்து கல்முனைப்பிராந்தியம் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
மிகவும் நேர்மையான அதிகாரியாய் கல்முனைப்பிராந்தியத்தில்  இனமதபேதம் கடந்த கடமை புரிந்த ஜோர்ஜ் ஐயா இப் பிரதேச மீனவர்களின் வாழ்விலும் ஒளியேற்றியவர்.இனமத பேதமற்ற சேவையை ஆற்றிய உயர்ந்த அதிகாரியான அவர் எந்த வேளையிலும் மிகவும் எளிமையான பழக்கவழக்கங்களைய பேணியிருந்தார். மிகவும் அடக்கமான பண்புள்ள சுபாவத்தைக்கொண்ட அவர் அதிகாரதோரணையில் ஒருபோதும் பேசியதில்லை.
 அனைவரதும் நன்மதிப்பைப்பெற்ற ஜோர்ஜ் நல்ல மனிதாபிமானமுள்ள மனிதராவார்.யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த இவர் யாழ். ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவராவார். மட்டுநகரில் திருமணம் முடித்து மட்டக்களப்பிலே வாழ்ந்தவர். யாரையும் நோகாமல் பழகுவதில் அவருக்கு நிகர் அவரே.
வையகத்தில் வாழ்வாங்குவாழ்ந்த அவர் வாழ்வோருக்கு நல்ல முன்னுதாரண புருசராவார்.
சிறந்த றோட்டரியன்!
சர்வதேச றோட்டரிக்கழகத்தின் நிரந்தர அங்கத்துவம் பெற்ற றோட்டரியனாகத் திகழ்ந்தார்.மட்டக்களப்பிலிருந்த றோட்டரிக்கழகத்தை கல்முனையில் ஸ்தாபித்தவர் அவர்.
கல்முனை றோட்டரிக்கழக ஸ்தாபக தலைவரான இவர் கல்முனையில் நடைபெறும் ஒவ்வொரு பதவியேற்பு வைபவத்திலும் கலந்தகொண்டு  தமது இனிமையான  பதிவுகளை எவரது மனம் நோகாமலும் பதிவுசெய்வார். இரவது பிரிவையிட்டு கல்முனை றோட்டரிக்கழக தலைவர் நோட்டரியன் மா.சிதம்பரநாதன் அனுதாப அஞ்சலியை விடுத்துள்ளார்.
அவரது அஞ்சலி அறிக்கையில் நோட்டரியன் ஜோர்ஜ் ஜயா போன்று ஒரு மனிதாபிமானமுள்ள நல்ல பண்புள்ள ஒரு மனிதனைக்காணவில்லை. அரவது இழப்பு எமது கழகத்தைப் பொறுத்தவரை பேரிழப்பாகும் என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பிரிவால் வாடும் துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை மாத்திரமே நம்மால் விதைக்க முடியும் என எமது செய்தியாளர் சகா கவலையோடு அறிவித்துள்ளார்.
(காரைதீவு  நிருபர் சகா)

By admin