கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் 2018.01.01ம் திகதி திங்கட்கிழமை பகல் 11மணியளவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் கல்முனை நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளும்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள். அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்..

இதேபோன்று வடகிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில்திருக்கோவில் காரைதீவு கல்முனை நாவிதன்வெளி பிரதேச உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்கள் கலந்த கொண்டு அறிமுகம் செய்துவைத்தனர்.ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு நிருபர் சகா)

By admin