ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்களின் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் என்ற தொனிப் பொருளுக்கு அமைய சம்மாந்துறைப் பொலிசார்  (29) வெள்ளிக்கிழமை பகல் சுற்றி வளைப்பில் ஈடுபட்டு ஹெரோயின் கேரளக் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கைப்பற்றியுளள்ளனர்.

இச் சுற்றி வளைப்பில்  சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னுஅசார் தலைமையிலான குழுவினர்  செந்நெல்கிராமத்தில்  தனியார் வாடகை வீடோன்றில் இருந்து மேற்படி போதைப் பொருட்களான  கேரளக் கஞ்சா 450 கிராமும்  கிரோயின் போதைப் பொருள் 9500 மில்லி கிராம் எடையுள்ள  போதைப் பொருட்களும் இலத்திரனியல் தராசுகள், பணம், கையடக்கத்தொலைபேசி சந்தேக நபரின் அடையாளஅட்டையும்  கைப்பற்றியதுடன் வீட்டிலிருந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

வீட்டிலுலிருந்த சந்தேக நபரை தீவிர விசாரைனக்கு உட்படுத்திய போது தான் இந்த வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும் இதனோடு சம்பந்தப்பட்ட நபர் கல்முனைக்குடியில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும்  சந்தேக நபர் தெரிவித்துள்ளார். மேற்படி விசாரனைகளை சம்மாந்துறைப் பொலிசார்  மேற் கொண்டு வருகின்றனர்.

காரைதீவு நிருபர் சகா

 

By admin