தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

(டினேஸ்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும் 2018.01.01ம் திகதி மாலை 02.30 மணிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்புஇ அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்இ ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடகிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. 2017.12.29ம் திகதி யாழ்ப்பாணம்இ 2017.12.30ம் திகதி வவுனியாஇ மன்னார்இ 2017.12.31ம் திகதி கிளிநொச்சிஇ திருகோணமலைஇ 2018.01.01ம் திகதி அம்பாறைஇ மட்டக்களப்பு என அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin