கல்முனை தமிழர் பிரதேசத்தில் குப்பை குவியல்கள்; மாநகரசபை ஏன் இந்த பாரபட்சம்?

கல்முனை மாநகரத்தில் வணக்கஸ்தலம், பாடசாலை ,மக்கள் குடியிருப்பு உள்ள இடத்தில் கொட்டப்படும் குப்பைகள் கல்முனை மாநகரசபையால் அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகிறது.

இதனால் டெங்கு நுளம்புகள் பரவுவதுடன், தொற்றுநோய்களும் பரவும் அபாயமுள்ளது. தமிழ், சிங்கள மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசத்தில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கொட்டப்படும் குப்பைகளை அகற்றவும் கல்முனை மாநகரசபை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது.


கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல தேரர்….

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட தமிழ் மக்களும், சிங்கள மக்களும் வாழும் பிரதேசத்தில் வேறு இனத்தவரால் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனை தடுப்பதற்கு கல்முனை மாநகரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்வில்லை அத்துடன் இந்த குப்பைகளை அகற்றவும் அக்கறை கொள்ளாதது ஏன்? குப்பை அகற்ற வரும் மாநகரசபை வாகனம் இந்த இடத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் செல்வது ஏன்?

விகாரை மற்றும் பாடசாலை உள்ளதுடன் மக்கள் குடியிருக்கும் இப்பரதேசத்தில் அதிகளவு போக்குவரத்து நடைபெறும் இந்த வீதியில் குப்பை குவிந்து காணப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன் சூழல் மாசடைகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமுள்ளது எனவே கல்முனை மாநகரசபை ஆணையாளர் உடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரசாங்கம் சூழலை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்படுத்தும்போது கல்முனை மாநகரசபை இவ்வாறு செயற்படுவதானது வேதனையளிக்கிறது என கல்முனை விகாராதிபதி ரண் முத்து கல தேரர் தெரிவித்தார்.

By admin