களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அனைத்து வளங்களும் பெற்ற தரமான வைத்தியசாலையாக மிளிரவேண்டும்.

 

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை தரம் பெற்ற பெற்ற வைத்தியசாலையாக மிளிரவேண்டும்.
அடுத்த வருடத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அனைத்து நிபுணர்களையும் நிரந்தரமாக கொண்ட ஒரு தரம் பெற்ற வைத்தியசாலையாக மிளிரவேண்டும். இதற்காக சுகுணன் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் நாங்கள் துணையாக இருப்போம் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரெட்ணராஜா தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் இடம் பெற்ற வருட இறுதிக்கான ஒன்று கூடல் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

மட்டக்களப்பு மாவட்டத்திலே எங்களுக்கு பொறுப்பாக 55 நிறுவங்கள் இருக்கின்றது. என்னைப்பொறுத்தளவில் அனைத்து நிறுவனங்களையும் நான் ஒரே கண்ணோடுதான் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கின்றேன். ஆனால் ஆதார வைத்தியசாலை என்று வரும்பொழுது அனைத்து வளங்களையும் கொண்ட வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையை அமைக்கத்தான் ஆசைஇ வைத்தியசாலைகளுக்கு நிதிகளை ஒதுக்கும்போது அதற்கான முடிவு எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றி நாங்கள் சிந்திப்பதுண்டு. ஆனால் இந்த வைத்தியசாலையை பொறுத்தமட்டில் முடிவுகள் மிகவும் சிறப்பாகத்தான் இருக்கின்றது.

களுவாஞ்சிகுடி அண்டிய பிரதேசங்களுக்கு இந்த வைத்தியசாலை ஒரு நிம்மதியளிக்கின்ற வைத்தியசாலையாக அமையவேண்டும் என நான் நினைக்கின்றேன். இனிவருங்காலங்களில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இவ்வாறு இருக்கமாட்டாது. எப்படியாவது மாவட்ட ரீதியிலான பெரிதான வைத்தியசாலையாக மாற்றவேண்டும்இ என்பதுதான் வைத்திய அத்தியட்சகருடைய விருப்பமும் எங்களுடைய விருப்பமாகவும் இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருடைய விருப்பமாகவும் இருக்கின்றது. ஆகவே இதற்குரிய முயற்சிகளை நாங்கள் தற்போது இருந்தே மெதுமெதுவாக செய்து கொண்டுவரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே மூடப்பட்டிருந்த அனைத்து வைத்தியசாலைகளும் தற்பொழுது திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இறுதியாக மாங்கேணி வைத்தியாசாலை திறபடாமல் இருந்தது அதனை திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலை திறக்கப்பட்டால் மாட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூடப்பட்ட அனைத்து வைத்தியசாலைகளும் திறந்தாகிவிடும்.

எனவே அனைத்து வைத்தியசாலைகளில் இருந்து மாற்றப்படுகின்ற நோயாளிகளை தாங்குகின்ற வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாiலை மிளிரவேண்டும் இதற்காக சுகுணன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் துணையாக நிற்போம். அடுத்த வருடத்தில் அனைத்து நிபுணர்களையும் நிரந்தரமாக கொண்ட ஒரு தரம் பெற்ற வைத்தியசாலையாக மிளிரவேண்டும் என எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இதன்போது தெரிவித்தார்

நன்றி சுபிட்சம்

By admin