தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது!

கல்முனை மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களின்ஒன்று கூடல் நேற்று (29) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் செல்லையா இராசையா தலைமையில் மணற்சேனையில் நடைபெற்றது.

எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாகவும், பிரச்சாரம் மேற்கொள்ளும் முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு திட்டமிடப்பட்டதுடன், தங்கள் கட்சியின் கொள்கைகள் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் வேட்பாளர்களுக்கு இவ்வொன்று கூடலில்விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

By admin