கல்முனை வீ.வீ வீதியில் குடிநீருடன் அசுத்த நீர் கலக்கும் அபாயம்; நீர்வழங்கல் அதிகாரசபையின் கல்முனை அலுவலகம் நடவடிக்கை எடுக்குமா?

கல்முனை வட்ட விதானை ( V.V Road) வீதியிலுள்ள குடிநீர் இணைப்பு குழாயில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வீதியில் பரவியவாறு உள்ளது. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் நீர் வழங்கல் அதிகாரசபையின் கல்முனை அலுவலகத்திற்கும்,  வாடிக்கையாளர் சேவைக்கும் அறிவித்திருந்தும் கடந்த மூன்று நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.

தற்போது மழை காலம் என்பதால்  வீதியில் தேங்கி நிற்கும் மழை நீர் உடைந்துள்ள குழாய்மூலம்  குடிநீருடன் கலந்து குடிநீர் அசுத்தமடையும் அபாயமும்  உள்ளதால்,  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை பணிமணை,  உடனடியாக குடிநீர் இணைப்பு குழாயினை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

நிதான்

By admin