(காரைதீவு  நிருபர் சகா)
நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப்பரீட்சைப் பெறுபேற்றின்படி கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரியில் இதுவரை மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் இருவர் பொறியியல் துறைக்கும் ஏனையோர் ஏனைய துறைகளுக்கும் தெரிவாகியுள்ளதாக அதிபர் தி.வித்யாராஜன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்வி;ஞ்ஞானத்துறையில் 5வது நிலையில்  எமது கல்லூரி மாணவியான சகாதேவராஜா மைத்ரி சித்தியடைந்துள்ளார்.
இவர் முதற்டவையாகத் தோற்றி 2ஏபி சித்திபெற்று 2.1125 இசட்புள்ளியுடன் மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் ஏ சித்தியும் பொதுப்பரீட்சையில் 80புள்ளிகளும் பெற்றுள்ளார்.
அம்பாறை மாவட்டத்து தமிழ்ப்பிரதேசப்பாடசாலைகளில் முதல்நிலையில் திகழும் செல்வி சகாதேவராஜா மைத்ரி காரைதீவைச்சேர்ந்த உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா எமது கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞானஆசிரியை நேசரஞ்ஜினி ஆகியோரின் சிரேஸ்ட்ட புத்திரியாவார். கடந்த 14ஆம் திகதி இவரது தாயார் நேசரஞ்ஜினி காலமானது குறிப்பிடத்தக்கது.
உயிரியல்விஞ்ஞானத்துறையில் இரண்டாவதுதடவையாகத் தோற்றி 18வது நிலையைப்பெற்ற செல்வன் திருநாவுக்கரசு கோபிநாத் 3ஏ பெற்றுச்சாதனை படைத்துள்ளார். அதேபோன்று செல்வி இராசையா டக்சிகா 2ஏபி பெற்று மாவட்டத்தில் 26வது நிலையை பெற்றுள்ளார்.
அதன்படி எமது கல்லூரியில் இம்முறை மருத்துத்துறைக்கு மூன்று மாணவர்கள் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கணிதத்துறையில் முதற்றடவையாக தோற்றிய செல்வன் திருநாவுக்கரசு பகீரதன் 3பி பெற்று மாவட்டத்தில்   41ஆம் நிலையையடைந்துள்ளார். இதேதுறையில் இரண்டாவது தடவையாகத்தோற்றிய செல்வி ரவிசங்கர் கேதுஜா எ2பி பெற்று மாவட்டத்தில்   23ஆம் நிலையைப்பெற்றுள்ளார். இருவரும் பொறியியல்துறைக்குத் தெரிவாகியுள்ளார்கள்.
மேலும் வர்த்தகம் கலை மற்றும் தொழினுட்பம் போன்ற துறைகளுக்கும் பல மாணவர்கள் தெரிவாகியுள்ளனர் என அதிபர் வித்யாராஜன் மேலும் தெரிவித்தார்.

By admin