சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராத்தே வீரர் பால்ராஜ் சிறந்த கராத்தே வீரருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்!

கராத்தே மூலம் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல விருதுகளைப் பெற்ற எமது பிரதேசமான சேனைக்குடியிருப்பபைச் சேர்ந்த கராத்தே வீரர்  பால்ராஜ் அவர்கள் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வர்ண விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த கராத்தே வீரருக்கான விருது வழங்கி கௌரவிக்ப்பட்டார்.

43வது தேசிய விளையாட்டு; போட்டியில் பங்கு கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு பதக்கங்களை பெற்றுக் கொடுத்த 169 வீரர்கள், அவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள்  22பேர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் 15 பேர் இவ்வாறு விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந் நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் 27 ஆம் திகதி நடைபெற்றது. மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஜி.டிசாநாயக்கா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதினை J.K.M.O கழகத்தின்  பிரதம போதனாசிரியரான sensei.S.  முருகேந்திரன் பெற்றுள்ளார். ஆறு வருடங்கள் தொடர்ச்சியாக இவ்விருதினைப் பெற்று வரும் இவர் பால்ராஜின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2017 ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியான கராத்தே போட்டியில் பால்ராஜ் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார் என்பதுடன் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பல விருதுகனைப்பெற்று எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள பால்ராஜ் இன்னும் பல சாதனைகள் படைக்க கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

By admin