கல்முனை 12ம் வட்டாரத்தில் எஸ்.எம்.எஸ் விளையாட்டக்கழகத்தின் ஏற்பாட்டில் த.தே.கூட்டமைப்பை ஆதரித்து  நடைபெற்ற  கூட்டம் !

கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டம் கல்முனை எஸ்.எம்.எஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (28) நடைபெற்றது.

கல்முனை கண்ணகிபுரம் வாசிக சாலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன், கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான சிவலிங்கம், சந்திரசேகரம் ராஜன், கல்முனை 11 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கென்றி மகேந்திரன் மற்றும் வேட்பாளர் அருந்ததி, முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினருமான ஏகாம்பரம் ,முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோரும் கண்ணகி அம்மன் ஆலய பூசகர் கிருபைராசா ஆகியோரும், இப்பிரதேச பொதுமக்கள், இளைஞர்கள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஏதிர்கொள்ளவிருக்கும் கல்முனை மாநகரசபைத் தேர்தல் தொடர்பாக இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் அனைத்து தமிழ் வேட்பாளர்களும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக பேசப்பட்டதுடன். தங்கள் வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ஒருமித்து வழங்குவதெனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.

By admin