கல்முனை 12ம் வட்டாரத்தில் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கூட்டாக தேர்தல் பரப்புரையில்!

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் 12 ஆம் தேர்தல் வட்டாரத்திற்கான வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

கல்முனை அம்மன்கோவில் வீதியில் வசிக்கும் மக்களுடனான சந்திப்பும் தேர்தல் பரப்புரையும் நேற்று (27) மாலை இடம்பெற்றது. இதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பில் 12 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான சிவலிங்கம், சந்தரசேகரம் ராஜன் ஆகியோரும், 11 ஆம் வட்டார வேட்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கென்றி மகேந்தரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மக்கள் சந்திப்பினை கல்முனை அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் திரு ரஞ்சன் ஏற்பாடு செய்திருந்தார்.

கென்றி மகேந்தரன் கருத்து தெரிவிக்கையில்…..

 

தமிழரின் பூர்வீக பிரதேசமான கல்முனையை தமிழரிடம் இருந்து பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் நடைபெறும் இவ்வேளையில், நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தமிழருக்கான ஆசனங்களை எந்த வகையிலும் இழக்காமல் பெறவேண்டியது அவசியமாகும்.

தமிழரின் வாக்குகள் பிரிபடாமல் எமது வாக்குகளை வீட்டு சின்னத்திற்கு ஒருமித்து வழங்கவேண்டும். குறிப்பாக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ள கல்முனை 12 ஆம் வட்டாரத்தில் எமது வாக்குகளை சிதறடிக்க பல்வேறு சதிகள் நடைபெறுகிறது எனவே இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே மிக அதிகளவான ஆதரவு இருந்தாலும் மிகச் சொற்பளவு வாக்குகள் வேறு கட்சிகளுக்கு சென்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வட்டாரத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவம்  இழக்கப்படும்  நிலையும் ஏற்படலாம் எனவே மக்கள் இதில் விழிப்பாக இருந்து எமது நிலத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே கட்சிக்கு வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக் வேண்டும் என்றார்.

 

By admin