கல்லாற்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை!

பெரியகல்லாற்றில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் வைத்து நேற்று மாலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பெரியகல்லாறு ஊர்வீதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இருவருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கத்திக்குத்து சம்பவத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியை சேர்ந்த ஜேசுதாசன்திமேசன்(23வயது)என்னும் இளைஞரே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மைத்துனர் இந்த சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin