ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று கூறினார்

இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த ஒருசில நாட்களிலோ கமல்ஹாசனும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளாராம்

இதுகுறித்து கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் கோவை தங்கவேல் கூறியபோது, ‘அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் கமல்ஹாசன், ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறியுள்ளார்

ரஜினி, கமல் இருவருமே ஜனவரியில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளது, தினகரனின் வெற்றி ஆகியவை தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது