பாண்டிருப்பு சுனாமி நினைவுத்தூபி சூழலில் இளைஞர்களின் ஏற்பாட்டில் சிரமதானம் நடைபெற்றது

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக பாண்டிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபி சூழலில் நேற்று சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. பாண்டிருப்பு விளையாட்டுக்கழகமும் (PSC), பாண்டிருப்பு ஸ்ரீ மகா விஷ்ணு இளைஞர் அமைப்பும் இணைந்து பொதுமக்களுமாக சிரமதானப்பணியினை செய்திருந்தனர்.

நாளை (26) சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு இத்தூபியில் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும். வருடாவருடம் இங்கு சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin