ஒரு மாதத்திற்குள் காய்ச்சலால் 5பேர் பரிதாப மரணம்!
காரைதீவு  நிருபர் சகா

கடந்த ஒரு மாதகாலத்துள் ஒருவகை வைரஸ் காய்ச்சலால் 5பேர் பரிதாபகரமாக
மரணித்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்புப்பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை வைத்திய அதிகாரி
டாக்டர்.எம்.என்.றெமன்ஸ் தெரிவித்தார்.

குறித்த வைரஸ் தொற்றானது நேரடியாக சுவாசப்பையை தாக்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சுவாசப்பை பழுதடைந்து மரணம் சம்பவிப்பதாக
கூறப்படுகின்றது.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

By admin