ஆர்.கே.நகர்:  தினகரன் முன்னிலை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிச.,21 ம் தேதி நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,24) சென்னை ராணி மேரி கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலில் மொத்தம் 1,76,885 ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுக்கள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டு போட மொத்தம் 4 பேர் பதிவு செய்ததில், ஒருவர் மட்டுமே ஓட்டளித்துள்ளார். பதிவான ஒரு தபால் ஓட்டை திமுக பெற்றுள்ளது. 
முதல் சுற்று முடிவுகள் :
தினகரன் (சுயேட்சை) – 5339 ஓட்டுக்கள்
மதுசூதனன் (அதிமுக) – 2738 ஓட்டுக்கள்
மருதுகணேஷ் (திமுக) – 1181 ஓட்டுக்கள்
கரு.நாகராஜன் (பா.ஜ.,) – 66 ஓட்டுக்கள்
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 258 ஓட்டுக்கள்
நோட்டா – 102 ஓட்டுக்கள்