கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்திற்கான த.தே.கூட்டமைப்பின் கூட்டம் இன்று நடைபெற்றது!

கல்முனை 12 ஆம் தேர்தல் வட்டாரத்திற்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் இன்று(23) நடைபெற்றது. கடற்கரை கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் 12 ஆம் வட்டாரத்திற்கான  தமிழரசுக்கட்சி  வேட்பாளர் க.சிவலிங்கம், ஊர் பொது மக்கள்,  தமிழரசு கட்சியின் உறுப்பினரும் முன்னாள் கல்முனை மாநகரசபையின் உறுப்பினருமான ஜெயக்குமார் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

12 ஆம் தேர்தல் வட்டாரத்தில் தமிழரின் வாக்குகள் சிதறப்படாமல் ஒற்றுமையாக  வாக்களிக்கப்படவேண்டியது வேண்டியது அவசியமாகும். வாக்குகள் 12 ஆம் வட்டாரத்தில் பிரிந்தால் தமிழர் எவருமே வர முடியாத பாதமதான நிலை எற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin