கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர உளநல வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக இயங்கி வரும் இவ் வைத்தியசாலையின் உளநலப்பிரிவுக்கு என நிரந்தர உளநலவைத்திய நிபுணர் இல்லாமல் பதில் கடமை நிபுணர்களின் சேவையிலேயே இயங்கி வந்தது.  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் முயற்சியினால் நிரந்தர உளநல வைத்திய நிபுணர் ஒருவர் சுகாதார அமைச்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் பெற்றுள்ள திருமதி சுமுது கொடவிட்ட(Mrs. SUMUTHU GODAVITTA)  உளநல வைத்திய நிபுணர் அவர்கள் கல்முனைப்பிராந்தியத்திற்கு ஒரேயொரு உளநலவைத்திய நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் உளநலப்பிரிவானது மிக சிறப்பாகவும், தனித்துவமாகவும் உளநல நோயாளர்களின் புனர்வாழ்வு என்பவற்றில் கூட அக்கறை காட்டி வருகின்ற வேளையில் வைத்திய நிபுணரின் வருகையானது இப்பிரிவை மேலும் வளர்ச்சிபெறச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மிக அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் இப்பிரிவின் வைத்திய அதிகாரிகள் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் ஆகியோரின் பங்களிப்பும் தொடரப்போகும் நிபுணரின் நிகரற்ற சேவைக்கு மேலும் வலுச்சேர்க்கும்.

By admin