முதல்முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி

கோலாலம்பூர் : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, முதல்முறையாக மலேசியாவில் வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.மலேசியாவில் உள்ள களப மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் மலேசியாவை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள், காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 15 மாவட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக, இந்த விளையாட்டு மலேசியாவில் நடத்தப்படுகிறது.