தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கல்முனைக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தன (- வேட்பாளர் விபரம்)

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகரசபைக்கான வேட்பு மனுக்களை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்  தாக்கல் செய்ததுள்ளன.

 

தமிழரசுக்கட்சியின்  முகவரான அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் அம்பாறை மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகத்தில் நேற்று (21)  த.தே.கூ  வேட்புமனுவை கையளித்து வேட்பு மனுவை தாக்கல்  செய்தார்.

கல்முனைத் தேர்தல் தொகுதி த.தே.கூ வேட்பாளர்கள் .

01.சேனைக்குடியிருப்பு. திருமதி.அன்னம்மா

02.நற்பிட்டிமுனை திரு. இராஜரத்னம்

03.கல்முனை 12 ம் வட்டாரம் இரட்டைத் தொகுதி திரு.சிவலிங்கம்

04.கல்முனை 12 ம் வட்டாரம் இரட்டைத் தொகுதி திரு.ராஜன்

05.பாண்டிருப்பு இரண்டாம் வட்டாரம் திரு.பொன் செல்வநாயகம்

06.பெரியநீலாவணை திரு. குபேரன்

07.பாண்டிருப்பு முதலாம் வட்டாரம் திரு.விஜயரட்ணம்

08.கல்முனை 11 ம் வாட்டாரம் திரு. ஹென்றி மகேந்திரன்

கல்முனை மாநகரசபைக்கு 40 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். அதற்காக 43 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 24பேர் கொண்ட பிரதான பட்டியலிலும் 7 தமிழ் வட்டாரங்கள் சார்பில் 8 பிரதான வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகர சபைத் தேர்தல் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் விபரம்

01.பெரியநீலாவணை திரு.கமலதாசன்(ஆசிரியர். முன்னாள் மாநகரசபை உறுப்பினர் )

02.பாண்டிருப்பு முதலாம் வட்டாரம் திரு.காத்தமுத்து கணேஷ் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்)

03.பாண்டிருப்பு இரண்டாம் வட்டாரம் திரு.மோகன்(மகேந்திரன்)
04.கல்முனை 11 ம் வட்டாரம் திரு.அமிர்தராஜ்(ராஜு)
05.கல்முனை 12 ஆம் வட்டாரம் இரட்டைத் தொகுதி திரு.புண்ணியநாதன்

06.கல்முனை 12 ஆம் வட்டாரம் கு.விஜயலெட்சுமி

07.சேனைக்குடியிருப்பு திரு.செல்வா
08.நற்பிட்டிமுனை திரு.சந்திரன்

 

 

By admin