சேனைக்குடியிருப்பு காமாட்சியம்மன் ஆலய வீதியினை புனரமைக்க நடடிவக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதி மிகவும் மோசமான நிலையில் பள்ளமும் குழியுமாக உள்ளதால் இவ்வீதியினை புனரமைக்க உரிய அதிகாரிகள் நடடிவக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மழை காலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு இவ்வீதியில் நீர் வழிந்தோடாமல் தேங்குவதால் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை மாநகரசபை ஆணையாளரே இது உங்கள் கவனத்திற்கு

By admin