பிரதமர் Malcolm Turnbull தனது அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இதன்படி நாட்டின் Attorney-General George Brandis-க்குப் பதிலாக சமூக சேவைகள் அமைச்சர் Christian Porter நியமிக்கப்பட்டுள்ளார். George Brandis ஐக்கிய இராச்சியத்திற்கான ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக பரிந்துரைக்கப்படவுள்ளார்.அமைச்சர் Michaelia Cash வேலைவாய்ப்பு துறைக்கு தரம் உயர்த்தப்படும் அதேநேரம், ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டதன்படி குடிவரவு அமைச்சர் Peter Dutton, நாட்டின் தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான Home Affairs அமைச்சராக பதவி உயர்வுபெறுகிறார்நஷனல் கட்சித் தலைவரும் விவசாயத்துறை அமைச்சருமான Barnaby Joyce, உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சுப் பொறுப்புக்கு மாற்றப்படும் நிலையில் அவரது இடத்திற்கு David Littleproud நியமிக்கப்படவுள்ளார். தற்போது உட்கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் Darren Chester பதவியிறக்கப்பட்டுள்ளார்.

Kelly O’Dwyer பெண்கள் விவகார அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். இவைதவிர இன்னும் பல மாற்றங்களை தமது அமைச்சரவையில் பிரதமர் Malcolm Turnbull கொண்டுவந்துள்ளார்.