(டினேஸ்)

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலையில் கவண ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு.

திருகோணமலை மாவட்ட ஆயரின் நோயல் இமானுவேல் அவர்களின் அழைப்பின் பேரில் நத்தார் உற்சபத்திற்காக திருமலை கலாச்சார மண்டபத்திற்கு வருகின்றமை குறித்து கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரால் இன்று 16 கவண ஈர்ப்பு போராட்டம் குறித்த பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகளும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது இருந்தும் போராட்டத்தின் ஆரம்ப நேரங்களில் பொலீஸாரின் தலையிட்டில் போராட்டம்  முடக்கப்பட்டிருந்தது.

இதன் போது கவண ஈர்ப்பு போராட்டத்தை நிறுத்துவதற்காக திருமலை மாவட்ட பொலீஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் போராட்டத்தை  முன்னெடுக்கச் சென்ற கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது பொலீஸார் தடைவிதித்தனர் அதனால் அப்பகுதியில் பதட்ட நிலை நிலவியதுடன் அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By admin