மட்டக்களப்பில் ஏனைய சபைகளுக்கும் கட்டுப் பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

(டினேஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஏழு பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணத்தை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ ஞானமுத்து ஸ்ரீநேசன்இ சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம்இ இந்திரகுமார் பிரசன்னாஇ மார்க்கண்டு நடராசா உட்பட கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்கனவே நான்கு உள்ளுராட்சி சபைகளுக்கான கட்டுப்பணமும்இ வேட்பாளர் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஏனைய உள்ளுராட்சி சபைகளான மட்டக்களப்பு மாநகரசபைஇ கோறளைப்பற்று வடக்குப் பிரதேசசபைஇ கோறளைப்பற்று மேற்குப் பிரதேசசபைஇ மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபைஇ போரதீவுப் பற்றுப் பிரதேசசபைஇ மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைஇ மண்முனை மேற்குப் பிரதேசசபை ஆகிய சபைகளுக்கே இன்றைய தினம் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினொரு உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

By admin