கல்முனை த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் இழுபறி தொடர்கிறது. ரெலோ உபதலைவர் ஹென்றி மகேந்திரன் ஒதுங்கமுடிவு?

எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத்த்தேர்தல், கல்முனை மாநகரசபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள்  தெரிவு இன்றுவரை முற்றுப்பெறாமல்  முடிவின்றி இழுபறி தொடர்கிறது.

வடக்கு கிழக்கில் ஆசனப்பங்கு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் கூடி தீர்மானங்கள் எடுத்திருந்தும், தற்போதும் வவுனியா, பட்டிருப்பு, கல்முனை போன்ற இடங்களில் இந்த சர்ச்சை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

ரெலோ உபதலைவர் ஹென்றி மகேந்திரன் ஒதுங்கமுடிவு?

அம்பாறை மாவடட்டத்தில் திருக்கோவில். காரைதீவு ,கல்முனை மாகநரசபை எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட சபை ரெலோவிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், நாவிதன்வெளி ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிகள் வசம் ஒப்படைப்பதெனவும் கூறப்பட்டிருந்தது.

கல்முனை மாநகரசபையை பொறுத்தவரை 8 வட்டாரங்கள் தமிழர்பிர தேசங்களைச்சார்ந்தது. இதில் 5 வட்டாரங்கள் ரெலோவிற்கும், 3வட்டாரங்கள் தமிழரசுக்கட்சிக்கும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் தற்போது தமிழரசுக்கட்சிக்கு 4ம் மீதி 4இல் 3 ரெலோவிற்கும் 1 புளொட்டுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற அழுத்தம் தற்போது பிரயோகிக்கப்பட்டுவருகிறது. வேட்பாளர் தெரிவு மக்களின் விருப்புபடியே பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தமிழசுக்கட்சி சார்பாக போட்டியிட முனையும் ஒரு சிலர் தங்களின் அரசியல் இலாபங்களுக்காக குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அழுத்தங்கள், இவ்வாறான குழப்பங்கள் காரணமாக இத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாம் என யோசிக்கின்றேன் என ரெலோ உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இதே வேளை எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்காக ஹென்றிமகேந்திரன் போட்டியிட வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.

 

தெரிவுக்குழு கூடி வேட்பாளர் முடிவுகளை உடன் எடுக்க வேண்டும்!

காலம் குறைவாக உள்ளதால் இந்த வேட்பாளர் தெரிவு இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்து   விரைவாக த.தே.கூட்டமைப்புக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்ட தெரிவுக்குழு கூடி ஒவ்வொரு வட்டார மக்களின் கருத்துக்களை உள்வாங்கி வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும் என கல்முனை தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதி செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 சர்ச்சைகளுக்கு முடிவினை விரைவாக காணவேண்டிய தேவையுள்ளதால் இரு தரப்பும் ஒன்றாக கூடி மக்கள் கருத்துக்களுடன் இரண்டு தரப்பும் வேட்பாளர் பட்டியலை ஒற்றுமையாக உடன் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.

 

By admin