கல்முனை தமிழருக்கெதிரான சதிகளை முறியடிக்க வாக்குகள் சிதறாமல் த.தே .கூ க்கு வழங்கவேண்டியது எமது கடமையாகும். மு.இராஜேஸ்வரன்.

கல்முனை தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து எமது ஆசனங்களை குறைக்க பல சதித் திட்டங்களை பலரும் பல கோணங்களில் முன்னெடுத்துவருவதனால், எமது மக்களும், இளைஞர்களும்  விழிப்பாக செயற்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது வாக்குகளை தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு எல்லோரும் வழங்கி எமது இருப்பை கல்முனையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல் தொடர்பில் கல்முனைநெற்றுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்….

பல்வேறு சவால்களை கல்முனை பிரதேச தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள் எமது மக்களுக்காக மேற்கொள்ளும் சதிகளுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல்கொடுபபதுடன்  சதிகளுக்கெதிராக செயற்படுவதும் தமிழத் தேசியக் கூட்டமைப்பே, ஆகவே கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது நாம் எல்லோரினதும் அவசியத்தேவையாகும்.

எமது வாக்குகளை தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்தமாக வழங்கி கல்முனை மாநகரசபையில் எமது தமிழர் ஆசனங்களை அதிகரிக்க வேண்டியது கல்முனை பிரதேச தமிழர்களின் பொறுப்பாகும் என்றார்.

By admin