கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (12) செவ்வாய்க்கிழமை நாடளாவியரீதியில் ஆரம்பமாகவுள்ளது. பழைய புதிய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும்.

பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி  அட்டை தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை  என்பவற்றை அவசியம் கொண்டுவர வேண்டும்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி தான் விண்ணப்பித்துள்ள பாடம் தொடர்பான உறுதிப்படுத்தல்கள் பரிசோதனை செய்து கொள்வதோடு அவை தொடர்பான ஏதேனும் மாற்றங்கள் காணப்படுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் குறிப் பிட்டுள்ளது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பது அவசியமாகும்.வெளிநாட்டுக் கடவுச்சீட்டையும் பயன்படுத்தலாம்.பரீட்சைக்கு முன்னர் கையொப்பங்களையும் பாடங்களையும் பரீட்சிப்பது அவசியமாகும்.

மாற்றங்கள் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்தோடு தொடர்பு கொள்ளலாம்.பரீட்சார்த்திகள் கையடக்கத் தொலைபேசி ஸ்மார்ட் கைக்கடிகாரம் இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றின் மூலம் மோசடிகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசேட கவனம் செலுத்தப்பட இருக்கின்றது.

பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவோருக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சைக்குத் தோற்ற தடை விதிக்கப்படும்.அவர்களின் பெறுபேறுகளும் ரத்துச் செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றி பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.

பரீட்சை மண்டபம் அமைந்துள்ள வளாகத்திற்குள் அங்கீகாரம் பெற்றவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.கட்டிட நிர்மாணப் பணிகள் பிரத்தியேக வகுப்புக்கள் விளையாட்டுக்கள் நிகழ்வுகள் என்பனவும் ரத்துச் செய்யப்படுவது அவசியமாகும்.

பரீட்சை மண்டபத்திற்குள் மோசடி செய்பவர்கள் பற்றி திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி தேவைப்படுவோர் 011 31 88 350   011 27 84 537  0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடித் தொடர்பிலக்கமான 1911 என்ற இலக்கத்தையும் தொடர்பு கொள்ள முடியும்.

காரைதீவு நிருபர்

By admin