கல்முனை மாநகரசபை பிரிப்பு விவகாரம் தொடர்பாக இன்று நடைபெறவிருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது!

கல்முனை மாநகரசபை பிரிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று(10) நடைபெறவிருந்த  கூட்டம்  பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக  விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இரண்டு தரப்பு பிரதிநிதகளும் விரைவில் வேறு நாளில் கல்முனை விவகாரம் தொடர்பாக சந்திப்பதென முடிவெடுத்துள்ளதாக முன்னாள் கல்முனை மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவர் கென்றி மகேந்தரன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.

 

By admin